முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் மாதிரி பள்ளியில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்களும், மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் அவர்களும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி நேற்று (22.02.2017) தொடங்கிவைத்தார்கள்.

 

மிதிவண்டிகள்

 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தெரிவித்தாவது:-இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா கல்லாதவர்களே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதே குறிக்கோளாக கொண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.84 ஆயிரத்தி 568 கோடி ஒதுக்கியதில் பள்ளிக்கல்வித்துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

பள்ளி மாணவ மாணவியர்களின் நலன் கருதி விலையில்லா என்னற்ற திட்டங்களை வாரி வழங்கி உள்ளார் இதில் குறிப்பாக விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டம், விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், விலையில்லா காலனிகள் வழங்கும் திட்டம், விலையில்லா வண்ண சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா கணித உபகரணங்கள் வழங்கும் திட்டம், விலையில்லா புத்தக பைகள் வழங்கும் திட்டம், விலையில்லா நிலவரைப்படம் வழங்கும் திட்டம், விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம், பள்ளிகளில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்,மற்றும் இலவசப்பேருந்து பயணச்சலுகை திட்டம், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்தல், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்குதல் போன்ற பொன்னான திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

இதில் குறிப்பாக, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,009 கோடியே 93 இலட்சம்; மதிப்பீட்டில் சுமார் 32 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து உள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் 36,105 மாணவ, மாணவியர்கள் ரூ.90 கோடியே 03 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகையால், மாணவ, மாணவியர்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்தி நன்றாக பயின்று இந்நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.கே.என்.இராமஜெயலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் நா.மாரிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago