முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில்மகாசிவராத்திரி விழா இன்று கோலாகலம்:இரவு தவில், நாதஸ்வர தொடர் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்றுமகாசிவராத்திரியையட்டி தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய வசதியாக அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவில் இணை ஆணைர் சி.ஹரிபிரியா தெரிவித்துள்ளார். அண்ணாமலை தொழுவார் வினைவழுவாவண்ணம் அறுமே என அடியார்கள் மெய்யுருகி வணங்கும் சிவபெருமான், அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய பெருமைக்குரிய திருத்தலம் திருவண்ணாமலை. எண்ணற்ற திருவிளையாடல்களை நிகழ்த்தி மானுட வாழ்வில் நெறிகளை போதித்த இறைவனின் தனிப்பெரும் திருவிளையாடலே மகாசிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. உமையாளுக்கு உகந்தது நவராத்திரி அந்த உமையாளுக்கு தமது இடது பாகம் வழங்கிய சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி. நம்முடைய அகஇருளை நீக்கி அகந்தை அழித்து மங்களம் அருளும் மகத்துவம் மிக்கது மகாசிவராத்திரி நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகாசிவராத்திரி என சிவராத்திரி 5 வகையாக போற்றப்படுகிறது. மாசிமாதம், சதுர்த்தசி, நாளில் அமைவதே மகாசிவராத்திரி ஆகும். மகாசிவராத்திரி உருவான திருத்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் மகாசிவராத்திரி தனி சிறப்பு மிக்கது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் முக்கிய விழாக்களில் மகாசிவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனையட்டி அண்ணாமலையார் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது இன்று கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றியும் வழிபடுவர் இந்நிலையில சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக லட்ச தீபங்கள் ஏற்றுவதற்குகட்டுப்பாடுகள் விதிககப்பட்டுள்ளன லட்ச தீபங்களை கிளி கோபுரத்திற்கு வெளியே மட்டும் ஏற்ற வேண்டும். பக்தர்கள் 2ம் பிரகாரத்தில் வலம் வருவதற்கு பதிலாக 3ம் பிரகாரத்தில் வலம் வரவேண்டுமென்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் பொது தரிசனம், கட்டண தரிசனம் வரிசையை ராஜகோபுரத்திலிருந்து அனுமதிக்கவும் முக்கிய பிரமுகர்களை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அம்மணி கோபுரம் வழியாக அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் தொடர்ந்து அதிகாலை 5 மணிமுதல் அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும் மதியம் 12 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு உச்சிகால அபிஷேகமும் மாலை 5மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்சதீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவார்கள் பின்னர் இரவு 8 மணிக்குசந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும், இரவு 9 மணிக்கு முதல் காலபூஜையும் இரவு 11 மணிக்கு 2ம்கால பூஜையும் நள்ளிரவு 1 மணிக்கு 3ம் கால பூஜையும் அதிகாலை 4 மணிக்கு 4ம் கால பூஜையும் நடைபெறும் தொடர்ந்து லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும் மகாசிவராத்திரியையட்டி கோவில் கலையரங்கில் மாலை 6 மணிமுதல் விடிய விடிய தேவாரப்பாடல்கள், இன்னிசை, பரதநாட்டியம் மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரே 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சிக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியையட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடவுள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்