Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் : 12வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாய பெருங்குடி மக்களே நீங்கள் நல்ல முறையில் வளர்த்து வரும் கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி(கசப்பு) நோய். இந்நோய் 63 வகையான வைரஸ் கருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக வரைவில் பரவக்கூடியது.

 

 

தடுப்பூசி

 

 

கால்நடைகளில் (பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த, திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து தொண்ணூற்றி ஒன்பது ஆயிரம் கால்நடைகளுக்குரிய தடுப்பூசி மருந்தினை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.தடுப்பூசிப்பணிகள் 01.03.2017 முதல் 21.03.2017 வரை கிராம வாரியாக நடைபெறும்.

 

கால்நடை மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோடும் பொருட்டு அந்தந்த கிராமங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் தடுப்பூசிப் பணி மேற்கொள்வார்கள்.கால்நடை வளர்ப்போர், தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசிக்குழுவினர் வரும்பொழுது தங்களிடமுள்ள 4 மாதத்திற்கு மேல் வயதுள்ள கன்றுகளுக்கும், சினைப்பசுக்கள், கறவைப்பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகளுக்கும் தவறாமல் தடுப்பூசியினை போட்டுக் கொண்டு பயன்பெறுமாறும், நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கவும் வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்