முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் 12-மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்வில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்:கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் 2017 மேல்நிலை பொதுத் தேர்வு மற்றும் இடைநிலை கல்வி பொதுத் தேர்வு ஃ மெட்ரிக் தேர்வுகள் எதிர்வரும் 02.03.2017 முதல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்வுக்குழு கூட்டம்இன்று (23.02.2017 நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) சூ.லதா அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது,காவல்துறையினர் தேர்வுத்துறையிடமிருந்து வினாத்தாள் மந்தண உறைகள் பெறப்பட்டு மாவட்ட தலைமையிடத்திலிருந்து வினாத்தாள் மந்தண உறைகள் வைக்கப்படும் கட்டுக்காப்பகங்கள் வரை எடுத்துச்செல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பக மையங்களுக்கு 24 மணிநேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதரவேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களான மேல்நிலைஇடைநிலை தேர்வு தலா 10 மையங்களிலிருந்தும் சம்மந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு தேர்வு நடைபெறும் நாட்களில் வினாத்தாட்கள் வழித்தட அலுவலர்கள் மூலம் காலை 7.00 மணிக்கு எடுத்துச்செல்வதற்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். முக்கிய பாட மேல்நிலைத் தேர்வு நாட்களான 13.03.2017, 21.03.2017, 27.03.2017 மற்றும் 31.03.2017 ஆகிய நாட்களில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர் மூலம் எடுத்துச் சென்று பாதுகாப்புடன் ஒப்படைப்பதற்கு ஆயுதம் ஏந்திய காவலர்களை நியமனம் செய்திட வேண்டும். மின்துறையானது தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் தேர்வு நேரமான (மேல்நிலைத் தேர்வு காலை 10.00 மணி முதல் மதியம் 1.15 மணி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு காலை 09.15 மணி முதல் 12.00 மணி வரையிலும்) மின்வெட்டு இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் மா.இராஜசேகரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்சினி உட்பட கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்