முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் சீமைக்கருவேலை மரங்கள் அகற்றும் பணிகளை கலெக்டர்,நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் சாமந்தான் பேட்டை, மேல நாகூர் பகுதிகளில் சீமைக்கருவேலை மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, மாவட்ட தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.பக்கிரிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

 

 

உயர்நீதிமன்றம் உத்தரவு

 

 

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையின் தீர்ப்பில் 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இதர மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தமக்குச் சொந்தமான அலுவலக வளாகங்கள், நிலப்பரப்புகள், சாலை ஓரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களிலும் மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களிலும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வரும் 25.02.2017க்குள் முற்றிலுமாக வேருடன் அப்புறப்படுத்திட வேண்டும். மேலும் சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள், பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் தமிமுல் அன்சாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், முருகேசன், அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்