முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆய்குடி கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 1551 பயனாளிகளுக்கு 73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் பழனிசாமி வழங்கினார்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் ஆய்குடி கிராமத்தில் நேற்று (23.02.2017) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. 1551 பயனாளிகளுக்கு 72 இலட்சத்து 97 ஆயிரத்து 380 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மனுநீதிநாள் முகாம்

இச்சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமிற்கு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் முன்னிலை வகித்தார்.

 

இம்முகாமில்; முதிர்கன்னி உதவித்தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, தற்காலிக உதவித்தொகை படிவ அட்டை வழங்குதல் மற்றும் திருமண உதவித்தொகை வழங்குதல், விதவைச் சான்று, பட்டா மாற்றம் செய்து சிட்டா, உட்பிரிவு செய்து பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை வழங்குதல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் மானியத்துடன் கூடிய பவர்டில்லர் வழங்குதல், கொய்யா தோட்டம் பராமரிக்க மானியம், பவர் ஸ்பிரேயர் வழங்குதல், விளக்கு பொறி வழங்குதல், விவசாயத்துறை மூலம் இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம், பாசிப்பயிறு மினி கிட், உளுந்து ஏடிடி வழங்குதல், வாரிசுச்சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று என மொத்தம் 1551 பயனாளிகளுக்கு ரூ. 72 இலட்சத்து 97 ஆயிரத்து 380 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.

 

நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. பேசியதாவது: தமிழக அரசின் திட்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர் புறங்களில் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மூலம் அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று ஏழை மக்களின் நிலையை அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு ஒரு வார காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கி வருகின்றார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 40 சதவீதம் ஊனமுற்றோர்க்கான அடையாள அட்டை இருந்தால் அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்படும். பொருளாதார கடன், உபகரணங்கள் போன்ற கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. சமுகநலத்துறையின் சார்பில் திருமணநிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண்குழந்கைகளை படிக்க வைக்க உதவித் தொகை அளிக்கப்படுகிறது. தொட்டில் குழந்தை திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

 

 

இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர்(பொ)மணிவண்ணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்; உதுமான்முகைதீன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் சாந்தி (வேளாண்மை), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துவடிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.சௌ.உ~h, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் கணேசன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்