முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுக் குழு கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான கலந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (23.02.2017) நடைபெற்றது.

 

 

காலிபணியிடம்

 

 

கலந்தாய்வுக் குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான நேர்காணல் வருகின்ற 1.03.2017, 20.03.2017 ஆகிய நாட்களில் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும்.

 

சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் வருகின்ற 3.03.2017 அன்று அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும்.

 

நேர்காணல் நடத்தும் அலுவலர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 

நேர்காணல் நடைபெறும் நாட்களில் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்களுக்கு குடிநீர் வசதி, இருக்கை வசதி, மின் விளக்கு, மின் விசிறி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய் தளம், தடுப்பு கட்டை, இரு சக்கர வாகன நிறுத்தும் வசதி, சாமியனா பந்தல், மைக் வசதி, பெண் காவல் துறை பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

 

விண்ணப்பதாரர்களுக்கு மைய வாரியாக டோக்கன் வழங்கப்பட்டு அந்தந்த மையத்திற்கு டோக்கன் வாரியாக கலந்து கொள்ள வேண்டும். வரவேற்பு அறை அமைக்கப்பட வேண்டும். வரவேற்பு அறையில் ஒரு உதவியாளர் அமைத்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

 

நேர்காணல் அழைப்பு கடிதம் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவாக பிரித்து அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 

விண்ணப்பதாரர் அனைவரும் பெண்களாக இருப்பதால், காவல் துறையினர் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் பாதுகாப்பு பணியில் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

 

கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆர்.தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்