சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா இன்று துவக்கம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      கடலூர்

சிதம்பரம்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது அந்த விழா இந்த ஆண்டு வருகிற 24ம் தேதி துவங்கி 5 நாட்ககள் நடைபெறுகின்றது. இது குறித்து தில்லைநாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் நிர்வாகிகள்நாட்டியாஞ்சலி விழா குழு தலைவர் நவமணி தீட்சதர் துணை தலைவர் சிவசங்கர தீட்சதர் பொருளார் நடராஜமூர்த்தி தீட்சதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சதர்கள் சார்பில் தில்லைநாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலி விழா இம்மாதம் 24 ந் தேதி துவங்கி 28-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.இந்த நாட்டியாஞ்சலி விழாவில் பிரபல நாட்டிய கலைஞர் டாக்டர் .பத்மா சுப்பிரமணியம் நடிகை சொர்ணமாலயா உள்பட பலர் கலந்து கொண்டு நாட்டியம் ஆட உள்ளனர். மேலும் உலகெங்கிலும் இருந்து பல்வேறு நாட்டின் நாட்டிய கலைஞர்களும், இந்தியாவின் பிற மாநிலநாட்டிய கலைஞர்களும் கலந்து கொண்டு பரதம், குச்சு புடி, மோகினி, கதக்களி, ஒடிஸ்ஸி, கூடியாட்டம், ஜகல்பந்தி உள்ளிட்ட கலையில் தேர்ச்சி பெற்ற நாட்டிய கலைஞர்கள் தங்களது நாட்டியத்தின் மூலம் இறைவனுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இந்த விழா தினமும் மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 9.30 மணி வரை நடைபெறும் துவக்க நாளான 24 ம் தேதி மட்டும் அதிகாலை 5 மணிவரை நடைபெறும். விழா ஏற்பாடுகளை தில்லைநாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். என கூறினார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: