முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணலபாடியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      விழுப்புரம்

செஞ்சி,பிப்.23:
செஞ்சி வட்டம் மணலபாடி கிராமத்தில் வியாழன் அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்.விழுப்புரம் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அனந்தராமன் தலைமை வகித்து பொது மக்களிடன் இருந்து மனுக்களை பெற்றார்.செஞ்சி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 19குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி அரசின் பல் வேறு திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே சிறப்புரையாற்றினார்.முகாமில் 207 மனுக்கள் பெறப்பட்டு துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.செஞ்சி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் பிரபுவெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், செஞ்சி ஒன்றிய திமுக செயலர் வழக்குரைஞர் ஆர்.விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் முத்து,
உதவியாளர் முருகன் உள்ளிட்ட பல் வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago