முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

     ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் துவக்கி வைத்து, அரங்கத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் 24.02.2017 மற்றும்  25.02.2017 ஆகிய இரண்டு தினங்களுக்கு தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.  இப்புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து பார்வையிட்டார். 

இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் உழவர் பாதுகாப்பு திட்டம், அம்மா திட்டம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பெண்களின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும் மகளிர் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும்   டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும், மாணவ, மாணவியர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதுதவிர தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் அரசு விழாக்களில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாக்கள் குறித்த புகைப்படங்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இரா.ராம்பிரதீபன், வருவாய் வட்டாட்சியர் சுகுமாறன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (செய்தி) ம.கயிலைச்செல்வம், (விளம்பரம்) நா.விஜயகுமார்,  உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்