ராகுல் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை: ஷீலா திட்சீத்

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2017      அரசியல்
Sheila Dikshit 2016 11 13

புதுடெல்லி, ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா திட்சீத் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரம் செய்தேன்

பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:-

“உத்தர பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக நான் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறுவது தவறானது. கட்சி எங்கெல்லாம் என்னை பிரச்சாரம் செய்ய சொன்னதோ அங்கெல்லாம் நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். உடல் நலக்குறைவு காரணமாக சில இடங்களுக்கு என்னால்  செல்ல முடியவில்லை. தற்போது எனது உடல் நிலை சீராக உள்ளது. பனராஸ் பகுதிக்கு விரைவில் பிரச்சாரம் செய்ய செல்ல உள்ளேன்.

அவகாசம் கொடுங்கள்

உத்தர பிரதேசத்தில்  உருவாகி உள்ள காங்கிரஸ் - சமாஜ்வாடி  கூட்டணி வரவேற்கதக்கது. உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு தலைவரே கிடையாது. பிரதமர் மோடி அங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.  அவருக்கு அரசியல் அனுபவமும், பக்குவமும் வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இருப்பினும் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்த பாடுபட்டு வருகிறார்.

பிரதமராக ஆவார்

விவசாயிகளுக்காக பேசும் ஒரே நபர் ராகுல்காந்தி மட்டும் தான். அவர் மனதில் உள்ளதை பேசக் கூடிய தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். ராகுல்காந்தி இதுவரை பிரதமர் ஆகவில்லை. அந்த வாய்ப்பு அவருக்கு பிற்காலத்தில் கிடைக்கும்.”
இவ்வாறு அவர் பேசினார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: