முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்:

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்திலுள்ள எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நேற்று காலை 2500பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது. இதனை முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ., ம.முத்துராமலிங்கம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


மதுரை மாநகர் அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நேற்று காலை,மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சி முன்னாள் மாவட்டகழக செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ.,ம.முத்துராமலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது.இதன் ஒரு பகுதியாக அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் இருக்கும் எம்.எஸ்.கே  திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் ம.முத்துராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள்.இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் திருப்பெயரால் பொதுமக்கள் 2500பேருக்கு அன்னதானம் வழங்கிடும் நிகழச்சியை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ.,ம.முத்துராமலிங்கம் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.மேலும் மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம்,திருநகர்,ஹார்விபட்டி,வில்லாபுரம் மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் அம்மாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியும்,கழக கொடியேற்றி இனிப்புகளும் கட்சி நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

 
இந்த அன்னதான விழாவில் நிகழ்ச்சியில் மதுரை மாநகர் வட்ட செயலாளர்கள் முருகேசன்,மு.கர்ணா,கருத்தமுத்து,அவனியாபுரம் பகுதி கழக இணைச் செயலாளர் பிரபாமுத்து,துணை செயலாளர் பவுன்ராஜ்,பகுதி செயலாளர் வக்கீல் முருகன்,மூர்த்;தி,மார்கெட் ராமமூர்த்தி,கல்மடை முருகன்,ராதா,தங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை மதுரை மாநகர் 59,60,61,62 வட்டகழகத்தின் அம்மாபேரவை மற்றும் மாணவரணி சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.முன்னதாக கள்ளிக்குடி ஒன்றியம் கூடக்கோவில் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் கே.கே.கிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்