முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

அகர்தலா  - திரிபுரா மாநிலத்தில் நேற்று நண்பகலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருந்தது. வடகிழக்கு மாநிலங்கள் மலைப்பாங்கான பகுதிகளாக இருந்தாலும் அந்த பிராந்தியத்தில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பூகம்பம் ஏற்பட்டது. மணிப்பூரில் ஏற்பட்ட  பூகம்பம் ரிக்டரில் 5.2 ஆக  பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் வடகிழக்க மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் சுமார் 7 வினாடிகள் நீடித்தது. இதனால் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர். சில இடங்களில் வீடுகள் குலுங்கின. திரிபுராவின் வடக்கப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் விபரம் குறித்து தகவல் எதுவும் இல்லை என்று பூகம்ப ஆராய்ச்சி நிலையத்தின் திரிபுரா பிரிவு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago