முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.1800 கோடியில் 50,ஆயிரம் வீடுகள் : தமிழக அரசு ஒப்புதல்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற நகரங்களில், ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், 50 ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் சென்னை மற்றும் பிற நகரங்களில் பல்வேறு திட்டங்களின்கீழ், 59 ஆயிரத்து 23 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தனிவீடுகளை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
945 கோடி ரூபாய் மானியம்

இந்த ஆண்டு, ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், 50 ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தனி வீடு ஒவ்வொன்றும், 300 சதுர அடி தரைப் பரப்பளவில் பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 945 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒவ்வென்றும் 400 சதுர அடி கட்டடப் பரப்பில், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி உள்ளிட்டவற்றைக் கொண்டதாக அமையும் என்றும் இவ்வீடுகள் அனைத்திற்கும் மின் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago