முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது : பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு தொழில்நுட்ப அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.  கர்நாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையானது தமிழ்நாட்டிற்குள் பாய்ந்து கடலில் கலக்கிறது. தமிழகம் வடிகால் பகுதியாக இருக்கிறது. பெரியாறு அணைப்பிரச்சினையில் தோல்வி அடைந்த கேரள அரசு பழிவாங்கும் நோக்கத்தில் பவானி ஆற்றின் குறுக்கே பல தடுப்பு அணைகளை கட்டி வருகிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பாலைவனமாகும் சூழ்நிலை உள்ளது. ஆந்திர அரசோ பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணைகளை கட்டி வருகிறது. இதனால் பாலாற்று பாசன பகுதிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம்:
கர்நாடக மாநிலமானது தமிழகத்திற்கு காவிரி நீரை விடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் பல அணைகளை ஏற்கனவே கட்டியுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி போன்ற அணைகளை கட்டி காவிரி நீரை பெருக்கிவைத்துள்ளது. இது போதாது என்று குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்கென்று காரணம் கூறி காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் மேலும் ஒரு அணையை கட்டும் முயற்சியில் கர்நாடகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதற்காக மத்திய தொழில்நுட்ப துறையின் அனுமதியை கோரி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எதிரானது:
கர்நாடக அரசானது ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணையில் 60 டி.எம்.சி. நீரை பெருக்கலாம். குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்காக இந்த அணை கட்டப்படுகிறது என்று கர்நாடகம் கூறுவதை நாங்கள், உங்களுடைய (பிரதமர்) மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மத்திய நீர்வள கமிஷன், சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வை கமிட்டி, மத்திய நீர்வளத்துறை, மத்திய வனத்துறை, மத்திய மின்சார துறை,மத்திய சுற்றுப்புறசூழல் துறை  ஆகிய அமைச்சகங்களின் அனுமதியும் பெற கர்நாடக அரசு அணுகி இருப்பதோடு இதற்காக பெரும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இது வடிகால் பகுதியாக இருக்கும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வழக்குகள்:
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் கேரள ஆகிய மாநிலங்கள் சேர்ந்து சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 5-2-17-ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில அம்சங்களை எதிர்த்து தமிழக அரசு சார்பாகவும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்தும் தமிழக அரசு சார்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரம் சுப்ரீம்கோர்ட்டுக்கு உட்பட்டதாகும். காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் வேறு எந்த திட்டத்தை கர்நாடகம் செயல்படுத்தனால் அது குறித்து வடிகால் பகுதி மாநிலமாக இருக்கும் தமிழகத்துடன் கலந்தாலோசித்து பங்கிட்டு கொள்வதோடு அதன் முழு விபத்தையும் திட்டத்தையும் காவிரி வாரியத்திற்கும் பணியை தொடங்குவதற்கு முன்பு காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நீர்வளம் மற்றும் நிதி சீரமைப்பு, கங்கை சுத்திகரிப்புத்துறை அமைச்சகமானது கடந்த 8-1-16-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்பதையும் தங்களுடைய (பிரதமர் ) மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மேலும் மேகதாது உள்பட எந்த திட்டத்தையும்  தமிழக அரசுக்கும் சுப்ரீம்கோர்ட்டுக்கும் முன்கூட்டியே தெரிவிப்பதற்கு முன்பு செயல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை  கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் மேகதாது அருகே தண்ணிரை பெருக்க கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கையானது ஏதேச்சதிகாரமும் தன்னிச்சையான நடவடிக்கையுமாகும். இந்த கர்நாடக அரசின் தன்னிச்சையான நடவடிக்கையானது தமிழகத்தை பெரிதும் பாதிக்கும். அதனால் தமிழத்தின் ஒப்புதல் பெறாமல் கர்நாடக அரசுக்கு காவிரியின் குறுக்கே  மேகதாது அணை திட்டத்தையோ அல்லது வேறு திட்டத்தையோ செயல்படுத்த மத்திய நீர்வளம், மத்திய வனம், சுற்றுப்புற சூழல் ஆகிய துறைகள் தொழில்நுட்ப அனுமதியை வழங்கக்கூடாது என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago