முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் மீதான மதிப்பு மரியாதை குறைந்து விட்டது : இந்திய வம்சாவளி எம்.பி. கண்டனம்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவின் மீதான மதிப்பு மரியாதை குறைந்து விட்டதாக இந்திய வம்சாவளி எம்.பி. ராஜாகிருஷ்ணமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திடீர் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஒலாத்தே என்ற இடத்தில் கார்மின் என்ற நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தவர், சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32). ஐதராபாத்தை சேர்ந்த இவர், கடந்த 22-ம் தேதியன்று இரவு தனது சக என்ஜினீயரும், நண்பருமான அலோக் மதசானி என்பவருடன் அங்குள்ள ‘ஆஸ்டின்ஸ் பார்’ என்ற மது விடுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த அமெரிக்கர் ஒருவர் அவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே சீனிவாஸ் பிணமானார். அவரது நண்பர் அலோக் படுகாயம் அடைந்தார். அவர்களுடன், துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயன்ற இயன் கிரில்லாட் (24) என்ற அமெரிக்கரும் காயம் அடைந்தார்.

கடற்படை வீரர்
துப்பாக்கி சூடு நடத்தியவர் அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) என தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட என்ஜினீயர் சீனிவாசுக்கு சுனயானா என்ற மனைவி உள்ளார். மனைவி கர்ப்ப்பமாக உள்ளார். இனவெறி படுகொலைக்கு சீனிவாஸ் ஆளாகி இருப்பது கண்டு, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

எம்.பி கண்டனம்
இந்த் தாக்குதலுக்கு  இந்திய வம்சாவளி எம்.பி. ராஜாகிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் இல்லினாய்ஸ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் இன வெறியில் நடந்துள்ளது. என் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இது மிக கொடூரமான, இனவெறி தாக்குதலாகும். இதன்மூலம் அமெரிக்காவின் மீதான மதிப்பு மரியாதை குறைந்து விட்டது. இதன்மூலம் நாட்டில் இனவெறி தாக்குதல்கள் தொடரும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற இனவெறி தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து அமெரிக்கர்களும், எம்.பி.க்களும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

சோகமான சம்பவம்
ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி பிரமுகர் புனித் அலுவாலியா கூறும் போது, “இது ஒரு சோகமான சம்பவம். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். இதன்மூலம் அமெரிக்கா மீதான நம்பிக்கை மற்றும் மரியாதைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்