முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது கணவரின் கொலை தொடர்பாக அமெரிக்க அரசிடம் இருந்து பதில் தேவை : என்ஜினீயர் மனைவி பேட்டி

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - எனது கணவர் கொலை தொடர்பாக எனக்கு அமெரிக்க அரசிடம் இருந்து பதில் தேவை என்றும் இது போன்ற குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார்கள் என்றும் சுட்டுக்கொல்லப்பட்ட என்ஜினீயர் சீனிவாசின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஒலாத்தே என்ற இடத்தில் கார்மின் என்ற நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்த சீனிவாஸ் குச்சிபோட்லா, அமெரிக்கர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது நண்பர் அலோக் படுகாயம் அடைந்தார். அவர்களுடன், துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயன்ற இயன் கிரில்லாட் (24) என்ற அமெரிக்கரும் காயம் அடைந்தார். அலோக்கும், இயன் கிரில்லாட்டும் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குற்றவாளி கைது
இந்த இனவெறி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில், குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவர் அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) என தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ. 2 கோடி நிதி
சுட்டுக்கொல்லப்பட்ட என்ஜினீயர் சீனிவாசுக்கு சுனயானா என்ற மனைவி உள்ளார். மனைவி கர்ப்ப்பமாக உள்ளார். கொல்லப்பட்ட சீனிவாசனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆதரவாக, தன்னார்வலர்கள் சிலர் நிதி திரட்டி வருகின்றனர். இதுவரையிலும், ரூ. 2 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. சீனிவாஸ் உயிரிழந்தாலும், அவரது குடும்பத்தினருக்கு, இந்த நிதி உதவி பயன்படும் என்றும் தன்னார்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பதில் தேவை
இந்த நிலையில் தனது கணவர் கொலை செய்யபட்டது குறித்து அவரது மனைவி சுனாயனா துமாலா கூறியதாவது:-எனது கணவர் கொலை தொடர்பாக எனக்கு அமெரிக்க அரசிடம் இருந்து பதில் தேவை. இது போன்ற குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார்கள். அமெரிக்காவில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று தன் கணவரிடம் கேட்டதற்கு, 'நல்ல விஷயங்கள் நடக்கும்'  சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்