முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரம் மாநிலத்தில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ !

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

அய்சால், மிசோரம் மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவர் இக்கட்டான சூழ்நிலையால், பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணர்

மிசோரம் மாநிலத்தில் சாய்ஹா பகுதி எம்.எல்.ஏ பெய்ச்சுவா ( வயது 52). 1991-ம் ஆண்டு மருத்துவப்படிப்பை முடித்த பெய்ச்சுவா 2௦ வருட மருத்துவ சேவைக்குப் பின் அரசியல் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். கடந்த 2013-ம் ஆண்டு மிசோரம் தேசிய முன்னணிக் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார். மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான பெய்ச்சுவா இக்கட்டான சூழ்நிலையால், தனது தொகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

பெண்ணுக்கு சிகிச்சை

இதுகுறித்து அவர் கூறுகையில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீவிர வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென்றும் எனக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக எனது அரசியல் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நான் சாய்ஹா மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தேன். மருத்துவமனையில் அந்த பெண்ணின் வயிற்றில் மிகப்பெரிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவேளை அறுவைசிகிச்சை செய்யப்படாமல் போனால் அந்த பெண் இறக்க நேரிடும் என்பதும் எனக்குத் தெரிய வந்தது.

மறக்க முடியாத நிகழ்வு

இதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பெண் நலமாக இருக்கிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளை நான் செய்திருந்தாலும், அரசியலுக்கு வந்தபின்னர் எந்த அறுவை சிகிச்சையும் நான் செய்யவில்லை. அதனால் இது எனக்கு மறக்க முடியாத ஒன்று என்றார் எம்.எல்.ஏ பெய்ச்சுவா. சாய்ஹா மாவட்ட மருத்துவமனையில் 7 மருத்துவர்கள் இருந்தாலும் ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் தான் இருக்கிறார். தற்போது அவரும் பயிற்சிக்காக வெளிநாடு சென்றிருப்பதால் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நிபுணர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்