முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விமான நிலையத்தில் குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் மகன் மற்றும் தாய் போலீசாரால் தடுத்து நிறுத்தம் !

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன்   - அமெரிக்க விமான நிலையத்தில் குத்துச் சண்டை உலகின் முன்னாள் ஜாம்பவான் முகமது அலியின் மகன், தாயாருடன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிசூடா மன்னர்
குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முகமது அலி மூன்று முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்று, அந்த துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தார். கடந்த 3-6-2016 அன்று மரணம் அடைந்த முகமது அலியின் மகளான லைலா அலியும் குத்துச் சண்டை வீராங்கனையாக பல மேடைகளை சந்தித்துள்ளார்.

2-வது மனைவி
மறைந்த முஹம்மது அலியின் இரண்டாம் மனைவி கலிலா கமாச்சோ அலி. தனது 17-வது வயதில் முஹம்மது அலியை திருமணம் செய்து கொண்ட இவர், பத்தாண்டுகளுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து, பிரிந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.

அதிகாரிகள் கேள்வி
மகன்களில் ஒருவரான முகமது அலி ஜூனியர்(47), அமெரிக்காவில் பிறந்தவராவார், பிலடெல்பியா பகுதியில் வசித்துவரும் இவரை புளோரிடா விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் மடக்கி வைத்து சரமாரியாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்ததாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

நீ முஸ்லிமா?
இந்நிலையில், தனது தாயார் கலிலா கமாச்சோவுடன் முகமது அலி ஜூனியர் ஜமைக்கா நாட்டில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு கடந்த 7-ம் தேதி விமானம் மூலம் வந்துள்ளார்.  இங்குள்ள ஃபோர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் ‘நீ முஸ்லிமா?’ என்று திரும்பத் திரும்ப கேட்டுள்ளனர்.

2 மணி நேரம் விசாரணை
ஆம், நான் முஸ்லிம்தான் என்று அவர் ஒப்புக்கொண்ட பிறகும் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டும், தேவையில்லாத பிற கேள்விக் கணைகளால் முகமது அலி ஜூனியரை சுமார் இரண்டு மணி நேரம் வறுத்தெடுத்துள்ளதாக தற்போது கெண்ட்டுக்கி மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago