முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மகனுக்கு 13 ஆண்டு சிறை !

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

வாவ் பாலோ  - கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் மகனான எடின்ஹோ-வுக்கு போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் 13 ஆண்டு சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் சரண் அடைய உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜாம்பவான்
பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரான பீலே கடந்த நூற்றாண்டின் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரராக வர்ணிக்கப்படுகிறார். உலகளாவிய கால்பந்தாட்டப் போட்டிகளில் பலமுறை பங்கேற்றுள்ள பீலே, தனது தாய்நாடான பிரேசில் மூன்று முறை வெற்றிக் கோப்பையை பெற காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 76 வயதாகும் பீலேவின் ஆட்டத்துக்கு இணையாக வேறு யாராலும் விளையாட முடியாது என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றளவும் கருதுகின்றனர்.

பீலே மகன்
பீலேவின் மகனான எட்சன் சோல்பி டோ நாசிமென்ட்டோ என்பவரும் கால்பந்தாட்ட வீரராக விளங்கி வருகிறார். பீலே உருவாக்கிய சாண்டோஸ் கால் பந்தாட்ட கிளப் அணியில் முன்னர் ‘கோல் கீப்பர்’ ஆக விளையாடி வந்த இவர், அந்நாட்டு மக்களால் எடின்ஹோ என்று பிரியமாக அழைக்கப்படுகிறார்.

மேல் முறையீடு
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு மற்றும் கள்ளத்தனமாக பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் முன்னர் கைதான எடின்ஹோவுக்கு பிரேசில் நாட்டு நீதிமன்றம் 33 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டு வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி அவரது தண்டனை காலத்தை 12 ஆண்டுகள் 10 மாதங்களாக குறைத்தார். இதையடுத்து, தன்னை போலீசாரிடம் ஒப்படைத்து சரணடைய அவர் தயாராக உள்ளதாக எடின்ஹோவின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்து சிறைக்கு சென்றாலும் இந்த தீர்ப்பையும் எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago