முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 ஆண்டு கால கங்குலி சாதனை முறியடிப்பு: அதிவேகத்தில் 9 ஆயிரம் ரன்கள் எடுத்து டிவில்லியர்ஸ் புதிய சாதனை

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன்  - அதிவேகத்தில் 9 ஆயிரம் ரன்னை எடுத்தவர் என்ற புதிய சாதனையை டிவில்லியர்ஸ் படைத்தார். அவர் 13 ஆண்டு கால கங்குலியின் சாதனையை முறியடித்தார்.

9 ஆயிரம் ரன்
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 85 ரன்கள் எடுத்தார். அவர் 5 ரன்னை எடுத்த போது 9 ஆயிரம் ரன்னை தொட்டார். 33 வயதான டிவில்லியர்ஸ் 214 போட்டியில் 205 இன்னிங்சில் விளையாடி 9080 ரன் எடுத்தார்.

புதிய சாதனை
இதன்மூலம் அதிவேகத்தில் 9 ஆயிரம் ரன்னை எடுத்தவர் என்ற புதிய சாதனையை டிவில்லியர்ஸ் படைத்தார். அவர் 13 ஆண்டு கால கங்குலியின் சாதனையை முறியடித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி 2004-ம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் 236 ஒருநாள் போட்டியில் 228 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்னை கடந்தார். இது தான் அதிவேக 9 ஆயிரம் ரன்னாக இருந்தது. இதை டிவில்லியர்ஸ் நேற்று முறியடித்தார்.

18-வது வீரர்
9 ஆயிரம் ரன்னை தொட்ட 18-வது சர்வதேச வீரர், 2-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றார். டிவில்லியர்ஸ் ஏற்கனவே குறைந்த பந்தில் அரைசதம், செஞ்சூரி மற்றும் 150 ரன்னை குவித்து உலகசாதனையை படைத்து இருந்தார். 50 ரன்னை 16 பந்திலும், சதத்தை 31 பந்திலும், 150 ரன்னை 64 பந்திலும் கடந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago