ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      கடலூர்
kurinjipadi

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடியில் தமிழக முன்னாள்  முதல்வர் புரட்சி தலைவி அம்மா  ஜெயலலிதா அவர்களின்  69-வது பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் எம் ஜி ஆர் சிலை அருகில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு குறிஞ்சிப்பாடி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதை தொடர்ந்து முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் முத்துலிங்கம்  புத்து மாரியம்மன் கோயிலில் ஏற்ப்பாடு செய்திருந்த சிறப்பு அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2000-பேருக்கு அன்னதானம் வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் வடக்குத்து  கோவிந்தராஜ்,ஒன்றிய துணை செயலாளர் சிவராமலிங்கம்,குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஆனந்தபாஸ்கர்,மு.ஒன்றிய பெருந்துணை தலைவர் மல்லிகாதங்கப்பன்மு.ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர்,மு.பேரூராட்சி துணைத்தலைவர் ரஜினிகாந்த்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிக்கன் அன்பு,பாசறை செயளாலர், வசந்தகுமார்,கார்திகேயன்,மு.வார்டு கவுன்சிலர்கள்,சுரேஷ்,அன்புமணி, சக்திவேல்,எம்.ஜி.ஆர் மன்றம் சேகர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: