முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை விழா

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

செஞ்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிப்பெருவிழாவில் இரண்டாம்நாளான சனி அன்று மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலநது கொண்டனர். அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசிப்பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாகா சிவராத்திரி அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தன.சனிக்கிழமை காலை மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு அன்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் மண்டை ஓடு மாலையுடன் நீண்ட சடை முடியோடு, மயானத்தை நோக்கி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றது. பின்னர் மாயனத்தில் பக்தர்களால் கொண்டுவரப்பட்ட கொழுக்கட்டை, சுண்டல், உள்ளிட்டகாய்,கறிகள், தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் மயானத்தை நோக்கி வந்த அம்மன் மீது வீசினர். இதை பக்த்ர்கள் ஆவலுடன் எடுத்து சென்றனர். பின்னர் அம்மன் அங்கிருந்து ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தது. விழாவில் ஆயிரகண்ககான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ், அறங்காவலர் ர.ஏழுமலைபூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்