முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.

மன் கி பாத்

பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’(மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி நேற்று பிரதமர் மோடி மன் கி பாத் உரை நிகழ்த்தினார்.
மக்களுக்கு நன்றி

அதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

“ குளிர் காலம் விலகி வசந்த காலம் தற்போது தான் நமது வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளது.  மன் கி பாத் நிகழ்ச்சிக்கு முன் எனக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.  இந்த சாதனை செய்த ஒரே நாடு இந்தியா தான். இந்தியாவின் சாதனையை உலக நாடுகள் பாராட்டுகின்றன. தண்ணீர் இருப்பு பற்றிக்கூறும் இஸ்ரோவின் சாதனையை பாராட்டுகிறேன்.

மின்னணு பரிவர்த்தனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளது. இதற்கு இஸ்ரோவின் உழைப்பும் காரணம். அறிவியல் இளைஞர்களை ஈர்க்க வேண்டும். நமக்கு இன்னும் அதிக விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். நமது சமூகமும் தொழில்நுட்பத்தை நோக்கி திரும்புகிறது. அனைத்து அமைப்புகளும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன. டிஜிட்டல் வர்த்தகம் இன்னும் வளர வேண்டும். பிம் ஆப்சை' அனைவரும் பயன்படுத்த வேண்டும்.  அம்பேத்கரை நினைவில் கொண்டு ஒவ்வொரு நபரும் 125 பேருக்கு பிம் அப்சை பற்றியும் அதை பயன்படுத்துவது பற்றியும் விளக்க வேண்டும்.  மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் சில நேரங்களில் பேரழிவுகள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றன.

2,700 லட்சம் டன் உற்பத்தி

விவசாயிகள் கடுமையாக உழைத்ததன் மூலம் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2,700 லட்சம் டன் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ரக்பி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வாங்கி தந்த வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள். மார்ச் 8 ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago