சங்கரன்கோவிலில் இலவச மருத்துவ முகாம்: அமைச்சர் ராஜலெட்சுமி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
mini rajalatchumi medical camp

சங்கரன்கோவில்.

மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 690 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், ராதாபுரம் பகுதிகளிலும், சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.சங்கரன்கோவிலில் நடைபெற்ற முகாமிற்கு சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராம்கணே~; தலைமை வகித்தார். நெல்லை சப்கலெக்டர் குழந்தைவேலு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மருத்துமமுகாமில் பொதுமருத்துவ பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு மருத்து பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை, தோல் நோய் பிரிவு, பல் மருத்துவம், தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசின் சீரிய திட்டமான 15வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இலவசரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் ராஜலெட்சுமி துவக்கி வைத்தார்.முகாமில், மாநில கூட்டுறவு விற்பனை இணை துணை தலைவர் கண்ணன், ஆவின் தலைவர் ரமே~;, கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வேல்ச்சாமி, ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வைரநாதன், நகர பாசறை பொருளாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: