முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துரோகம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. உண்மைதான் எப்போதும் வெற்றிபெறும்:ராசிபுரம் அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

 

மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரம் நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் நகர கழக செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச்செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச்செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். இப்பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது, நமது இதய தெய்வம் அம்மா அவர்களின் பாசறையில் வந்த இயக்கம் எதையும் தாங்கும் இதயம் கொண்ட இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாங்கி நின்று கழகத்தை காக்க வேண்டும் என்பதற்காக உயிர்; தியாகம் செய்த இயக்கமாகும். அதைவிட சோதனை வந்துவிட்டது என்று சொன்னால் மீண்டும் மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை அமைப்போம். எழுச்சியோடு பணியாற்றுவோம் என்று இங்கு வருகை தந்துள்ளீர்கள். இன்று அம்மா இருந்திருந்தால் எப்படி விமரிசையாகவும், ஏழைகளின் விழாவாகவும் கொண்டாடபட்டிருக்கும். ஆனால் இன்றைய தினம் அம்மா அவர்கள் தனக்கென்று யாருமில்லை. நான் தவவாழ்வு வாழ்கிறேன். இந்த மக்கள்தான் என்னுடைய மக்கள், மக்களுக்காகவே வாழ்ந்த இன்றைய தினம் நமது இதய தெய்வத்திற்கு பிறந்தநாள் விழா கூட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். மறைந்து இரண்டரை மாதம் தான் ஆகிறது. அதற்குள் எத்தனை துரோகங்கள் நடக்கின்றது. துரோகம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. உண்மைதான் எப்போதும் வெற்றிபெறும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டு சாதாரண தொண்டனாக எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக வந்திருக்கின்றார். இது நமது கழகத்தில் மட்டும்தான் சாத்தியமாகும். ஒரு சாமானியர் தமிழகத்தில் முதல்வராக வந்திருக்கின்றார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத திமுக-வும் அதோடு சேர்ந்து துரோகம் இழைக்கின்றவர்கள் தான் இன்றயை தினம் எங்களை குறைக்கூறி கொண்டிருக்கின்றார்கள். அம்மா அவர்கள் உடல்நலம் இல்லாத நிலையிலும் ஊர் ஊராக வந்து பிரச்சாரம் செய்து நமக்கு எதிரி திமுக, நமக்கு எதிரி கருணாநிதி, ஸ்டாலின் இவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. 2006-2012-ல் என்ன நடந்தது தமிழக மக்கள் எவ்வளவு இன்னல்களை சந்தித்தார்கள், துன்பங்களை அனுபவித்ததார்கள். தாய்மார்கள் வெளியே செல்ல முடிந்ததா என்பதை நாம் பார்த்து கொண்டிருந்தோம். அதுபோன்ற நிலைமை மீண்டும் தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகதான் அம்மா எங்களை போன்றவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு ஊர் ஊராக வந்து பிரச்சாரம் செய்து புரட்சித்தலைவரின் ஆட்சியை அம்மா அவர்கள் நிறுவினார். ஆனால் இன்று ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காக அந்த இயக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, இங்கே துரோகம் இழைத்துவிட்டு சென்றவர்களின் நிலைமையை நீங்கள் நினைத்து பாருங்கள். அம்மா அவர்கள் யாருக்காக இந்த ஆட்சியை கொண்டுவந்தார்கள். ஏழை மக்களுக்காக, தாய்மார்களுக்காக இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஆட்சி துரோகிகளின் கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகதான் அம்மா அவர்கள் ராணுவ கட்டுப்பாடோடு, எனக்கு பின்னாலும் நூற்றாண்டு காலம் இந்த இயக்கம் ஆட்சியிலே இருக்க வேண்டும் என்று அம்மா நினைத்தார்கள். இதை சட்டசபையிலே கூறினார்கள் என்று சொன்னால் நம் உடலிலே ஓடுகின்ற ரத்தம் அம்மாவுக்காக ஓடுகின்ற ரத்தம். ஒவ்வொரு தொண்டனும் அம்மா சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இந்த இயக்கத்திற்காக அம்மா அவர்கள் இந்த உயிரையே மாய்த்து கொண்டிருகின்றார்கள். இந்த இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் இந்த ஆட்சி காப்பாற்றப்பட வேண்டும். இரட்டை இலை சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். உங்களை போல் துரோகம் இழைக்கும் துரோகிகள் மட்டும் இந்த இயக்கத்தில் இல்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். இங்கேயிருந்து பிரிந்து சென்றவர், இங்கேயிருந்து இரட்டை இலை சின்னத்தில் தேர்தெடுக்கப்பட்டவர் இன்று துரோகத்திற்கு துணை போய் உள்ளார். இந்த இயக்கம் காப்பாற்றபட வேண்டும் என்பதற்காக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு சாமானியர் இன்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்தது, நமது மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் இன்று தமிழக முதல்வராக வந்திருக்கின்றார் என்றால் நமக்கு எல்லாம் இது எவ்வளவு பெரிய பெருமை. 2 மாத காலமாக பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அவர் அம்மா அவர்கள் கொண்டு வந்த எந்த ஒரு திட்டத்தையாவது செயல்படுத்தியுள்ளாரா. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற அன்று ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்கள். அதில் முதல் கையெழுத்து 500 மதுக்கடைகளை மூடுவது, தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று முதல் கையெழுத்திட்டு இன்றே 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அம்மா அவர்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவேன் என்றார்கள். இரண்டாவது கையெழுத்திட்டு மானியத்தில் இந்த ஆண்டு 1 இலட்சம் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க கையெழுத்திட்டார்கள் என்று சொன்னால் இதுவல்லவா அம்மா அவர்களின் ஆட்சி. நாட்டியிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக, உலகளவில் போற்றப்படுகின்ற இயக்கமாக அம்மா அவர்கள் நமது இயக்கத்தை உயர்;த்தி காட்டியுள்ளார்கள். இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும். அம்மா அவர்கள் சட்டமன்றத்திலே எனக்கு பின்னாலும் நூற்றாண்டுகாலம் இந்த இயக்கம் ஆட்சி செய்ய வேண்டும் என்று எதற்காக சொன்னார்கள். அம்மா மறைந்து இரண்டரை மாதங்களில் அம்மா அவர்களுக்கு துரோகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வந்தது. இந்த இயக்கத்தை நாம் காப்பற்ற வேண்டாமா? நாங்கள் துரோகம் செய்தால் அம்மா அவர்களின் ஆன்மா எங்களை மன்னிக்காது. அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் மலரவேண்டும் என்பதற்காக தான் 122 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வந்துள்ளார்கள். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்கின்றது. பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த இராசிபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய அவினாசி சட்டமன்ற உறுப்பினருமான சபாநாயகராக உள்ளார். திமுக-வைச் சார்ந்த 88 உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். பேரவைத்தலைவர் அவர்கள் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும், நாடாளுமன்றத்திலும் ரகசிய வாக்கெடுப்பு என்பதற்கு சட்டத்திலே இடமில்லை. ஆகையால் நாங்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என்று கூறினார். ஆனால் சபாநாயகர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். அவர் கையை பிடித்து இழுத்துவிட்டு அந்த இருக்கையில் திமுகவினர் அமர்ந்து கொண்டார்கள்.

 

 

நாங்கள் எல்லாம் சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்துள்ளோம். அந்த மேஜை மேல் ஏறி நின்று எப்படியாவது நாங்கள் கோபப்பட வேண்டும் எப்படியாவது அடிதடி நடக்க வேண்டும் என்பதற்காக சுமார் 3 மணிநேரம் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். எங்களுக்கெல்லாம் அம்மா அவர்களின் ஆட்சியை இழந்து விட கூடாது என்ற ஒரே கொள்கை தான் இருந்தது. அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடைய இந்த ஆட்சி காப்பாற்றபட வேண்டும் என்று நமது சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேரும் அமைதியாக அமர்திருந்தோம். திமுகவினர் செய்த அராஜகத்தை பொருத்து கொண்டு இருந்ததின் விளைவு இன்று சாமானியர் தமிழக முதல்வராக அமர்ந்துள்ளார். திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தினர். அதற்கு பின்னால் சபாநாயகரையும் அடித்து விட்டார்கள். அந்த மேஜைகளையெல்லாம் தள்ளி உடைத்து விட்டு அங்கேயிருந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து எங்களை தாக்கினார்கள்;. எப்படியாவது ஏதாவது ஒரு தகராறை உண்டு பண்ணி கைகலப்பை ஏற்படுத்தி நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தி இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணம். இந்த இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு பி.ஆர்.சுந்தரம் டெல்லி சென்று மனு கொடுக்கிறார். புரட்சித்தலைவர் யாரை எதிர்த்து எந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ கடைசிவரை அம்மா அவர்கள் யாரை எதிரியாக நினைத்தார்களோ அவர்களுக்கு சாதகமாக இரட்டை இலையை முடக்க மனு கொடுப்பவர் உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டனா. இதற்காகவா அம்மா அவர்கள் இத்தனை திட்டங்களை கொண்டுவந்தார்கள். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தவ வாழ்வு வாழ்ந்தேன் என்று சொல்லி எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எனக்கு இருக்கின்றது இந்த தாய்மார்களும் இந்த குழந்தைகளும்தான் என்று சொன்னார்களே அந்த தாய்க்கா இந்த துரோகம்? இரண்டரை மாதங்களுக்குள்ளா இந்த துரோகம் நடக்க வேண்டும். இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டு இருக்கின்றோம். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று அங்கே மனு கொடுக்கின்றார்கள். வர இருக்கின்ற தேர்தலில் அம்மா அவர்களின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி அந்த திட்டங்களின் வாயிலாக கருணாநிதி கட்சி எப்படி இந்த ரவுடி தனத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றினார்களோ அதை மக்களிடம் சொல்லி நாங்கள் வாக்கு கேட்போம். அம்மா அவர்கள் ஆட்சி வரவேண்டும் அதற்கு நீங்கள் வாக்களியுங்கள் என்று கேட்போம். 2006-2011 ஐந்தாண்டு காலம் பல்வேறு கஷ்டங்களை மக்கள் அனுபவித்தார்கள். அந்த கஷ்டம் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கி விடக்கூடாது. அம்மாவுக்கு எதிரி கருணாநிதி கட்சி அதுதான் நமக்கும் எதிரி என்று நாம் செயல்பட வேண்டும். அதுதான் அம்மா அவர்களின் பிறந்தநாளில் ஏற்றுக் கொள்கின்ற சபதம். இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனான எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராகி உள்ளார். ஆனால் திமுக-வில்; கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலினுக்கு பின்னால் அவர் மகனும் வருவதற்கு தற்போது உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால் திமுக ஒரு குடும்பத்தின் இயக்கம். ஆனால் அம்மாவின் இயக்கம் மக்களின் இயக்கம். இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்