முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் மாசி அமாவாசையை முன்னிட்டுஅங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

 

சேலத்தில் மாசி அமாவாசை முன்னிட்டு அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைப்பெற்றது. புராண நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் அம்மனின் வேடம் தரித்த பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை பருகிய படி மயானதிற்கு பக்திப்பரவசத்தோடு ஆடி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். தமிழ் மாதங்களில் வரும் மாசி மாதம் அங்காளம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அங்காளம்மனின் பிறப்பிடமாக கருதப்படும் மேல்மலையனூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன், பெரியாண்டிச்சி மற்றும் பேச்சாயியம்மன் உள்ளிட்ட கோவில்களில் மாசித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆக்ரோசத்துடன் மயானத்திற்கு சென்று மனித சாம்பலை பூசிக்கொள்ளும் புராண நிகழ்வினை நினைவு படுத்து விதமாக நடத்தப்படும் மஹாசிவராத்ரியை அடுத்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன் ஆலையங்களிலும் நேற்று நடைபெற்றது. இதற்காக நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், அம்மனின் வேடம் தரித்து, மயில் இறகுகளால் ஆன அலங்காரங்களுடன், பக்திப்பரவசத்துடன், சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.இதனையடுத்து கோவில்களை விட்டு வெளியே வந்த பக்தர்கள், பம்பை மேள இசைக்கு ஏற்றவாறு,ஆவேசத்துடனும், பரவசத்துடனும் நடனமாடியபடி மயானத்தை நோக்கி வந்தனர் குறிப்பாக சேலம் காக்காயன் மயானத்திற்கு வந்த பக்தர்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் விதமாகவும், மிரட்சியை ஏற்படுத்தும் வகையில் முகத்தில் வண்ணங்களை பூசி விதவிதமான வேடங்களை அணிந்து ஆடிய படி வந்தனர். அப்போது நேர்த்திக்கடனுக்காக, பக்தர்கள் வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை வாங்கி அதன் கழுதை கடித்து ரத்தத்தை பருகியவாறு சாமி ஆடிவந்தனர். அப்போது பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தரையில் நீண்டு படுத்தனர். படுத்தனர். சாமி வேடத்தில் வந்தவர்கள் அவர்களை தாண்டியபடி சென்றனர்.இதனையடுத்து மயானத்திற்கு சென்ற அம்மன் வேடம் தரித்தவர்கள் அங்கு அம்மனுக்கு பல்வேறு விஷேச பூஜைகளை மேற்கொண்டு சுடுகாட்டு சாம்பலை சூறைவிட்டு தங்களது விரதத்தை முடித்தனர். இதனையடுத்து அம்மனின் வேடம் தரித்தவர்கள், மயானத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். இந்த பிரசாதங்களை உட்கொண்டால் திருமண மாகாதவர்களுக்கு திருமணம் ஆகும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகதால் ஏராளமான பக்தர்கள் மயானங்களில் குவிந்தனர்.இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக நடத்தினாலும் சேலத்தில் மட்டுமே புராண நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக தத்ரூபமாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்திப்பரவசத்துடன் செல்லும் பக்தர்களால் பொதுமக்களுக்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் பலத்த காவல்துறை பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்