முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : வைத்திலிங்கம் எம்.பி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி கிழக்கு

 

கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான

 

அரசு நலத்திட்ட உதவிகள் ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

 

 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.

 

மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இவ்விழாவில் கலந்து கொண்டு வருவாய்த்துறையின் மூலம் 147 நபர்களுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாவும், 14 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும், 2 பயனாளி;களுக்கு தோட்டக்கலை துறை மூலம் மரக்கன்றுகளும், 6 பயனாளிகளுக்கு சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25,000 வீதம் வைப்புத் தொகையாக 6 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 3 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், ஆக மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,

அம்மா அவர்களின் அரசு ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டுமென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். குறிப்பாக விலையில்லா கறவைப் பசு, விலையில்லா ஆடு, சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார கடன், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை, நல்ல சுகாதாரம் ஆகியவை நாட்டு மக்களுக்கு வழங்குவது நல்ல அரசின் கடமையாகும். எந்த ஒரு மனிதனும் உணவில்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கொண்டு வந்தது அம்மா அவர்களின் அரசு தான். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா வாழ்ந்தார்கள். அம்மா அவர்களின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்து வழியில் வந்த அரசு தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அம்மா 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த திட்டமாகும். பெண்கள் கல்வி கற்க வேண்டும். பெண்கள் கல்வி கற்றால் சமுதாயத்திற்கு நாட்டிற்கும் பேருதவியாக இருக்கும் என்பதை அறிந்து பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மடிக்கணினி தி;ட்டத்தின் மூலம் கிராமப்புறத்திலுள்ள ஏழை எளிய மாணவியர்கள் தங்களுடைய மடிக்கணினி மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள உதவியாக உள்ளது. கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக வர வேண்டுமென்பதற்காக கல்வித்துறைக்கு வருடத்திற்கு 24000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

கிராமப்புற மாணவ மாணவியர்கள் நலன் கருதி, நீட்ஸ் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுத்தது அம்மா தான். அம்மா வழியில் வந்த இந்த அரசு கடை கோடி கிராமத்தில் உள்ள மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்கள் நன்கு படித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் சிறந்த மருத்துவர்களாகவும், சிறந்த வழக்கறிஞர்களாகவும், உயர் அதிகாரியாகவும், நல்ல குடிமகனாகவும், வர வேண்டும். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரைதிருஞனாம், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.காந்தி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ம.சேகர், தலைமையாசிரியர் என்.சேகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெ.சுப்புலெட்சுமி, பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்