முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

  நத்தம், - திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசிப்பெருந்திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது நேற்று காலையில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் மேளதாளம் முழங்க அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக இந்த விழாவின் போது தக்கார் வேல்முருகன், நிர்வாக அதிகாரி ஞானசேகரன், திருக்கோவில் பூசாரிகள், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல் ,விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
               இன்று செவ்வாய்கிழமை காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து தீர்த்தக்குடங்களுடன் சந்தன கருப்பு கோயிலை வந்தடைவர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்களை மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து செல்லப்படும்.  பின்னர் மாரியம்மனுக்கு காப்பு கட்டியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாள் விரதம் மேற்கொள்வர். இதைதொடர்ந்து இக்கோவிலில் தினமும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்குதல் 14ந் தேதி செவ்வாய்கிழமையன்று நடைபெறும். 15ந் தேதி பூப்பல்லக்கு விழா நடைபெறும். சுகாதார பணிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் காவல்துறையினரும் செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்