முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை வங்கிகள் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பொதுத் துறை வங்கிகள்  வேலைநிறுத்தத்தில்  ஈடுபடுகின்றன,  இதனால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்  எனத் தெரிகிறது.

போராட்டம்
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், பண மில்லா பரிவர்த்தனை செய்வதை கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  பொதுத் துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு
வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், வங்கிப் பணிகளை அயல்பணிகளாக அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

சேவைகள் பாதிக்கும்
இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 9 வங்கி சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில்,  வங்கி சங்கங்களில் உள்ள பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவித்த்துள்ளதால் பணப்பரிவர்த்தனை சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தனியார் வங்கிகள் இயங்கும்
இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் மற்றும் கோடக் மகேந்திரா ஆகிய தனியார் வங்கிகள் வழக்கம் போல் தொடரும் என்று தெரிகிறது. ஆனால் இதில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காது என்று தெரிகிறது. 27 பொதுத் துறை வங்கிகள் தான் 75 சதவீத வர்த்த பணப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இதனால் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago