முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பரமக்குடி வட்டம், காட்டு பரமக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் 09.01.2016 அன்று வைகை ஆற்றில் குளிக்க சென்ற போது நீர்pல் மூழ்கி உயிரிழந்ததையடுத்து நிவாரண நிதியுதவித்தொகையாக ரூ.50ஆயிரத்திற்கான காசோலையினை அவரது தந்தை ராஜ்குமாரிடம் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் வழங்கினார். இதுதவிர தமிழ்நாடு நோயாளர் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்ற 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.50ஆயிரம் மதிப்பிலான காசோலைகளும் ஆக மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில்; மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.சேதுமாதவன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்