விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      விழுப்புரம்
4

விழுப்புரம்.

 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

 

இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வ+தியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் அடையாள அட்டை ஆகியன கோரி 496 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும், சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தமுருகப்பிள்ளை என்பவரின் மகள் வேல்விழி மற்றும்மாயவன் என்பவரின் மகள் கீர்த்திகா ஆகியோர் மணிமுத்தாறு ஆற்றில் மூழ்கி இறந்தமைக்கு மேற்படி உயிரிழந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000- வீதம் மொத்தம் ரூ.1,00,000-க்கான காசோலைகளும், திண்டிவனம் வட்டம், ஓங்கூர் கிராமத்தைச் சேர்ந்தஏழுமலை தபெ.நாராயணசாமி என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதற்கு தமிழ்நாடு நோயாளர் நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.25,000-க்கான காசோலையும், திண்டிவனம் வட்டம் மற்றும் நகரத்தைச் சேர்ந்தஎஸ்.வி.நமச்சிவாயம் என்பவரின் சேவையை பாராட்டி 2016ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்பு நற்சேவை சான்றிதழ் - 2016 வழங்கியும், மேலும் தமிழ்நாடு மல்லர் கம்பம் சங்கத்தின் சார்பாக மாநில அளவில் கலந்து கொண்டு தனி நபர் பிரிவிலும், குழப்பிரிவிலும் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களை கலெக்டர் இல.சுப்பிரமணியன்பாராட்டினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்சி.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.)பத்ரிநாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கே.விஜயா, உதவி ஆணையர் (கலால்)ஏ.ராஜேந்திரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ)ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்பிரகாஷ்வேல், மாவட்ட விளையாட்டு அலுவலர்ஞானசேகரன், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: