முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணப்பாடு படகு விபத்து பகுதியில் தென் மண்டல ஐஜி நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

திருச்செந்தூர்,

 

திருச்செந்தூர் அருகில் உள்ள மணப்பாடு கடல் பகுதியில் சுற்றுலா சென் படகு கவிழ்ந்தில் 10 பேர் பலியாகினர், 11 பேர் காயமடைந்து திருச்செந்தூர் அரசு மற்றம் தனியார் மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னிஸ், மற்றும் கடலோரபாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பந்தமாக மணப்பாடு பகுதியை சேர்ந்த படகு உரிமையாளர் கெவின் மற்றும் படகினை ஓட்டிச்சென்ற செல்வம் இருவர் மீதும் வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படகில் 15 குழந்தைகள் உட்பட 42 பேர் பயணம் செய்ததாக கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் சக்திவேல் கூறினார். படகு கவிழ்ந்த மணப்பாடு கடற்கரை பகுதியில் தென்மண்டல ஐஜி முருகன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். படகு விபத்தில் பலியான 10 பேர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்