முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பிலான காசோலை: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றதுவிளையாட்டு துறையின் மூலம் 8 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பிலான காசோலை மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ஒரு மாணவிக்கு ரூ.9,800 மதிப்பிலான உருபெறுக்கி கருவி என மொத்தம் ரூ.43 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்டங்களை கலெக்டர் வழங்கினார்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேலை வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்;பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 229 - மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 மனுக்களும் ஆக மொத்தம் 236- மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். முன்னதாக சூளகிரி தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) அலுவலக பயன்பாட்டிற்கு நான்கு சக்கர வாகனத்தின் சாவியை தனி வட்டாட்சியர் ப.பெருமாள் அவர்களிடம் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.பின்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வி.கே.ஆர்த்தி என்ற மாணவிக்கு ரூ.9,800- மதிப்பிலான உருபெறுக்கி கருவியினையும், விளையாட்டுத்துறை சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சீருடை வாங்குவதற்கு ரூ.34,000ஃ- மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, உதவி ஆணையர் ( ஆயம்) முருகேசன், தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) (சமூக பாதுகாப்பு திட்டம்) ரகுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலலர் குமரேசன் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்