முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : வருவாய் அலுவலர் பத்மஜாதேவி தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தி.ந.பத்மஜாதேவி தலைமையில் நேற்று (27.02.2017) நடைபெற்றது.

உதவி தொகை

 

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இக்கூட்டத்தில், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 2015-16ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வீரர், வீராங்கணைகள் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றமைக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வெற்றிப்பெற்ற வீரர், வீராங்கணைகளை பாராட்டி, காசோலையை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 35 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுயதொழில் செய்வதற்கு கடனாக ரூ.1 கோடியே 2 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் வங்கிகள் மூலம் நேரடி காசோலைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஸ்வரி, துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் தி;ட்டம்) மங்கலம், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் முத்துவேல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், வீரர், வீராங்கணைகள், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்