முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, தலைமையில் நடைபெற்றது.

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி,   தலைமையில்  நடைபெற்றது.

              இக்கூட்டத்தில்,  பொது மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட  277  மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட  கலெக்டர்   அதன் மீது உரிய நடவடிக்கையினை,  உடனடியாக  மேற்கொள்ள  தொடர்புடைய துறை  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள்.

                           மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு வட்டத்தைச் சார்ந்த 7 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000/- வீதம் ரூ.84,000/- மதிப்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவி தொகை, மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக ரூ.25,000/- வீதம் ஒரு  பயனாளிக்கும், மனவளர்ச்சி குன்றிய இருதய அறுவை சிகிச்சைக்காக ரூ.25,000/-  ஒரு  பயனாளிக்கும், கை,கால் செயல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கான ரூ.25,000/-  உதவித்தொகை  ஒரு பயனாளிக்கும்,  மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை என மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

             மேலும், தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் பேட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000 /- இராண்டாம் பரிசு ரூ. 7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000 /- என 18 மாணவர்களுக்கு மொத்தம் 1,39,000/- காசேலையாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் பிரிவு தேசிய அளவிளான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.6,000/- மும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 4,000/- மும், மொத்தம் 15 மாணவ மாணவியர்களுக்கு ரூ.84,000/- மதிப்பீலான காசேலைகளையும், பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும்  மாவட்ட கலெக்டர்   வழங்கினார்கள்.

               இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துனை கலெக்டர் சுகவனம், மாவட்ட விளையாட்டு அலுவலர், தனித்துணை கலெக்டர்கள்  உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள்  பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்