முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்லட் ரயில் விடும் திட்டம் என்னாச்சு? மோடிக்கு அகிலேஷ் கேள்வி

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

தியோரியா, புல்லட் ரயில் விடப்படும் என்று அளித்த உறுதிமொழி என்னாச்சு என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்கள் எதுவும் சரியாக செயல்படுத்தப்படவில்லை. மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.  இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆட்சியே காரணம் என்று மாநில தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் உள்பட பாரதிய ஜனதா கட்சியினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புல்லட் ரயில்:

பாரதிய ஜனதாவுக்கு பதில் அளிக்கும் வகையில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் பதில் அளித்து வருகிறார்கள். முதல்வர் அகிலேஷ் யாதவ் மேலும் ஒரு படி மேலே போய் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மோடிக்கு இன்னொரு முறை பிரதமராக வாய்ப்பு இருக்காது. அதனால் அவர் அளித்த புல்லட் ரயில் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தியோராவில் நடைபெற்ற சமாஜ்வாடி தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது:-

குஜராத் மாநிலத்தில் 3 முறை முதல்வராக மோடி பதவி வகித்தவர். ஆனால் அங்கு எந்த இடத்திலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றவில்லை. நான் முதல் தடவையாகத்தான் உ.பி. முதல்வராக பதிவி வகிக்கிறேன். இந்த பதவிக்காலத்தில் 3மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றி வருகிறேன். நரேந்திர மோடி பிரதமராகி 3 வருடங்களாகப்போகிறது. அவர் பதவி ஏற்றவுடன் புல்லட் ரயில் [அதிவேக ரயில்] விடப்படும் என்று கூறினார். ஆனால் அந்த திட்டம் என்னாச்சு. புல்லட் ரயில் எங்கே போயிருச்சு என்று கேட்கிறேன். மாநிலத்தில் மாணவர்கள் தேர்வில் பார்த்து எழுதுகிறார்கள் என்று மோடி கூறுகிறார். தற்போது மாநிலத்தில் தேர்வு நடக்கும் நேரமா இது. பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட கேள்வித்தாள்கள் அவுட்டாகியதில் பலர் பிடிபட்டுள்ளனர்.

ஒபாமா அதிபராக இருந்தபோது இந்தியாவுக்கு வந்தார். அவர் அணிந்திருந்த கோட் மாதிரி மோடியும் கோட் தைத்து அணிந்திருந்தார். அதிலும் கோட்டில் பிரிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. பெரும் பணக்காரர்கள்தான் இந்தமாதிரி கோட்டில் பிரிண்ட் அடித்திருப்பார்கள். அதேமாதிரி மோடியும் காப்பி அடித்து தாம் அணிந்திருந்த கோட்டில் பிரிண்டடித்திருந்தார். இவ்வாறு அகிலோஷ் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்சாரம் பற்றாக்குறை இருக்கிறது. சரியான சப்ளை இல்லை என்று யோகி ஆதியானந்த் குற்றஞ்சாட்டியிருந்தார். இவர் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பியாக இருக்கிறார். இவருக்கு பதில் அளித்துள்ள அகிலேஷ், மாநிலத்தில் மின்சார சப்ளை குறித்து பாபாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் மின்சார வயரை அவர் தொட்டுப்பார்த்தால் தெரியும் மின்சார சப்ளை இருக்கிறதா? அல்லது இல்லையா?  என்று கூட்டத்தில் பலத்த கரகோஷத்திற்கிடையே கூறினார். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்கள் விடப்பட்டுள்ளது.. அதேமாதிரி இந்தியாவிலும் புல்லட் ரயில் விடப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago