முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி பொதுமக்களுக்காக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய், திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜேந்திரன், சுகாதா பணிகளின் துணை இயக்குநர் ஜெகவீராபண்டியன் என்ற குணசேகரன், ஆகியோர் உத்தரவுப்படி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் கமர்தீர் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கணேசன், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, இளநிலை உதவியாளர் ரோகினி ஆகியோரி முன்னிலை வகித்தார். பேரணியில் சுகாதாரதுறை மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சாந்தி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் விஜயா, வட்டார மருத்துவ அலுவலர்கள் கவிபிரியா, மேனகா, செனார்டு தொண்டு நிறுவன செயலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இக்பாலியா பள்ளி, மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலை

ப்பள்ளி மாணவிகள், செஞ்சிலுவை சங்கபடை, பசுமைப்படை, சாரணர்சாரணியர் இயக்கப்படை உள்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இப்பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி தபால் அலுவலக சாலை, டென்னிஸ்கிளப் சாலை, காந்திநகர் மெயின்சாலை, கணவாய்பட்டி சாலை, பட்டிவீரன்பட்டி சாலை, திண்டுக்கல் சாலை, மீண்டும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது. பேரணியின் போது டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வசதியாக 10 வண்டிகள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதுகாக்க விழிப்புணர்வு பலகை கண்காட்சி மாதிரி செய்து வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 இம்முகாமில் பொது சுகாதார துறை சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், அகமதுரிபாய், சேகர், ஜான்பீட்டர், மணிகண்டன் மற்றும் அனைத்து பணியாளர்களுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள் முடிவில் வத்தலக்குண்டு பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சி.கணேசன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago