முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், -திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவை காண திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருவார்கள். இவ்வருடத்திற்கான திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. மறுநாள் 24ம் தேதி வெள்ளிக்கிழமை அம்மனின் பூத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் 28ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்தது. விழாவையொட்டி விஸ்வகர்ம மகாஜன சபையினரால் கொண்டு வரப்பட்ட மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்டது. முன்னதாக பிரார்த்தனை மண்டபத்தில் அக்கசாலை விநாயகர் கோவிலில் இருந்து திருமாங்கல்யம், மஞ்சள் புடவை மற்றும் மங்கள பொருட்கள் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.

அதன்பின் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் தெரு சாம்பன்குல மகாசபையினரால் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின் பாலக்கொம்பு கோவில் கொடிமரம் முன்பு ஊன்றப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிம்மவாகனத்தில் கோட்டை மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு தீபாதாரதனை காட்டப்பட்டது. பின் அம்மனின் கண் திறக்கப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்