மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தீ மிதி திருவி்ழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 1 மார்ச் 2017      விழுப்புரம்
DSC 0135

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிப்பெருவிழா ஐந்தாம் நாளான செவ்வாய் அன்று தீ மிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசிப்பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாகா சிவராத்திரி அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தன.ஐந்தாம் நாளான திங்கள் அன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. மாலை 4 மணிக்குமேல் தீ மிதி திருவிழா தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு தீ குண்டத்தில் இறங்கியது. இதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பக்தி கரகோஷத்துடன் தீ மிதித்து தங்களது வேண்டுதல் நிறைவேறம், நேர்த்தி கடனை செலுத்தியும் தீ மிதித்து வழிபட்டனர். விழாவில் பல் வேறு மாவட்டங்களில் இருந்த வந்த ஆயிரகணக்கான பக்தர்கள் விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து வேப்பிலையுடன் பகல் 12 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்தனர். ஏராளமான பெண்களும், ஆண்களும், குடும்பத்தோடும், குழந்தைகளோடும் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

தீ குண்டத்தின் அருகே பக்தர்களுக்கு பாதுகாப்பாக தீ அணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் நின்று கொண்டு பக்தர்களை பாதுகாப்பாக தீ மிதிக்க ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ், அறங்காவலர் ர.ஏழுமலை பூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: