முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 1 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

கன்னியாகுமரி,மார்ச்.02-

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம், தமிழகம் முழுவதும் பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 28 வரை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைத்து போடப்பட்டு வந்தது.

தற்போது அந்த தடுப்பூசி முகாம், அனைத்து குழந்தைகளும் (9 மாதம் முதல் 15 வயது வரை) பயன்பெறும் வகையில், மார்ச் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் தடுப்பூசி முகாம், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் வைத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் உள்ள 4,44,603 குழந்தைகள் அனைத்தும் பயன்பெறும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது, நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு. மதுசூதனன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திருமதி. பாலா உட்பட சுகாதாரதுறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago