முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம் : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புதன்கிழமை, 1 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் (சாம்பற்புதன்கிழமை) சிறப்பு ஆராதனைகளுடன் துவங்கியது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களின் தெய்வமான இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் கடைசியாக சாத்தானால் சோதிக்கப்பட்டு 40 நாள் உபவாசம் மேற்கொண்டு சாத்தானை தனது மரணத்தின் மூலம் வென்றார். இந்த 40 நாள் தவக்காலத்தை லெந்து காலம் என்றும், தபசுக் காலம் என்றும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். 40 நாள் தவக்காலம் துவக்கத்தைதான் சாம்பற்புதன்கிழமையாக அனுசரித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகளுடன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் துவங்கியது. நாசரேத் புனித யோவான் பேராலயத்தில் தலைமைப்பாதிரியார் தேவசகாயம் தலைமையில் உதவிப் பாதிரியார் தனசிங்; முன்னிலையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் மூக்குப்பீறி சேகர குரு டெம்புள் சாமுவேல் ராஜன் தலைமையில் உபதேசியார் ஜாண் முன்னிலையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத் தலைவரும், சேகர குருவானவருமான டி.ஜி.ஏ.தாமஸ் தலைமையில் சபை ஊழியர் கோயில்ராஜ் முன்னிலையிலும்,மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் குருவானவர் டெம்புள் சாமுவேல் ராஜன் தலைமையிலும்,பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை கத்தோலிக்க தேவாலயத்தில் பங்குத் தந்தை பொறுப்பு மரியஅரசு தலைமையிலும் கிழுவெள்ளமடம் பரிசுத்த கன்னிமரியாளின் ஆலயத்தில் சேகரகுரு வெல்றன் தலை மையிலும், பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரகுரு ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமையிலும் சாம்பற்புதன்கிழமை சிறப்பு ஆராதனைகளுடன் லெந்து  காலம் துவங்கியது.இன்றுமுதல் காலை 5 மணிக்கும்,இரவு 9 மணிக்கும் அனைத்து ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி சின்னக்கோயிலில், மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போன்று, தூய பனிமய மாதா பேராலயம், புனித அந்தோனியார் திருத்தலம், யுதா ததேயு திருத்தலம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதையடுத்து, கிறிஸ்தவர்கள் அடுத்த 40 நாள்களை தவக்காலமாகக் கடைப்பிடிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து புனித வெள்ளி திருச்சடங்குகள் வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் பாடுகளை உணர்த்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி ஆலயங்களில் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago