முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் வெங்கடாசலம், துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற 12-வது சுற்று கோமாரி (வாய் மற்றும் கால் காணை) நோய் தடுப்பூசி முகாமினை இன்று (01.03.2017) மாவட்ட ஆட்சி;த்தலைவர்ந.வெங்கடாசலம்,  துவக்கி வைத்தார்.

முகாமிற்கு அழைத்து வரப்பட்ட கால்நடைகளின் வருகை குறித்தும், கால்நடைகளுக்கு அளிக்கப்படுகின்ற தடுப்பூசி போடும் பணி தொடர்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மடிப்பேடுகள் குறித்தும், ஊநீர்கள் இருப்பு குறித்தும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்க்காணை நோயை தடுப்பதற்கு மாவட்டம் தோறும் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கப்பணி, மலடுநீக்க சிகிச்சைப்பணி, சினைப்பரிசோதனை, ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் மற்றும் சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற பணிகளும், கோழிக்கழிச்சல் தடுப்பூசிகள், விவசாயிகளுக்கு தீவனப்புல் வளர்த்தல், தாதுக்கலவைகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாவட்டத்தில் 96,340 பசு இன கால்நடைகளுக்கும், 1,060 எருமை இன கால்நடைகளுக்கும் என மொத்தம் 97,400 கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசி 12-வது சுற்று பணிகள் 01.03.2017 முதல் 21.03.2017 வரையிலும், விடுபட்ட கால்நடைகளுக்கு 22.03.2017 முதல் 30.03.2017 வரையிலும் நடைபெறவுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு தங்களது பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களில் கால்நடைகளை அழைத்துச் சென்று உரிய சிகிச்சையினை கால்நடைகளுக்கு அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.

இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொ) மரு.அசோகன்உதவி இயக்குநர் மரு.கணபதிமாறன்பெரியகுளம் வட்டாட்சியர்சுருளிமைதீன்கால்நடை மருத்துவர்கள் மரு.அன்பழகன்மரு.முருகன்கால்நடை பாராமரிப்புத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்