முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2 தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி தகவல்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      திருச்சி

திருச்சி மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2 ஆகிய தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமசாமி தெரிவித்துள்ளார்.

 

தகுதி தேர்வு

 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1, தாள் - 2 முறையே 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்விற்கான விண்ணப்பங்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 06.03.2017 முதல் 22.03.2017 வரை (ஞாயிற்றுகிழமை தவிர) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் -1, தாள் -2 ஆகிய இருதேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர் தனித்தனியாக விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் விற்பனை மையங்கள் தொடர்பாக மாவட்ட வாரியான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திருவாணைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, புத்தூர் பாத்திமா உயர்நிலைப்பள்ளி, துவரங்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, திருச்சி வைகவுண்டஸ்கோஷன் உயர்நலைப்பள்ளி, மணப்பாறை, பொத்தமேட்டுப்பட்டி புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, தாளக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளுர் அரசு உயர்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரட்டாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் 06.03.2017 முதல் 23.03.2017 வரையுள்ள நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டிருப்பினும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமசாமி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago