முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் : துணை இயக்குநர் சம்பத் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 1 மார்ச் 2017      பெரம்பலூர்
Image Unavailable

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடனான விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சம்பத் தலைமையில் நேற்று (01.03.17) மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சார்ந்த 31 தலைமையாசிரியர்கள் மற்றும் தொடக்கஃ நடுநிலை உயர்ஃமற்றும் மேல்நிலை பள்ளி 31 தலைமையாசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குறித்த ஐயங்களுக்கு துணை இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மருத்துவர்களால் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

 

தட்டம்மை

 

அதனை தொடர்ந்து துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) தெரிவித்ததாவது:9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் இந்த தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை அளிக்கும்போதுதான் போலியோவைப் போன்று தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை தமிழகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியும். எனவே, இதுவரை தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் ஆராம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் வழங்கப்பட உள்ளது. இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ பாதிப்போ ஏற்படாது, மிகவும் பாதுகாப்பானது. எனவே, இந்த தடுப்பூசி முகாம் முற்றிலுமாக வெற்றியடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களான அ.பிரேம்குமார் (மேல்நிலை) மற்றும் அ.மணிவண்ணன் (இடைநிலை) உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்