முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் : கலெக்டர் நிர்மல் ராஜ் தகவல்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உடனடியாக சீர் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.அவ்வாறு மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்காத கட்டடங்கள் உள்ளாட்சி அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்

அபராதம்

மேலும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் குடிநீர் தொடர்பான புகார்களை பொதுமக்களிடமிருந்து பெற்று அதனை சரிசெய்திட கண்காணிப்பு அலுவலகம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-2190 –ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்