முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யும் குடிநீர் திட்டப்பணிகள் கலெக்டர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு

புதன்கிழமை, 1 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் காசிபாளையம் மற்றும் விஸ்வநாதபுரி அண்ணாநகர் காலனி பகுதியில் பொதுமக்கள் நீண்டநாள் குடிநீர் தேவையென்று கோரிக்கை வைத்ததையொட்டி மாற்று ஏற்பாடு செய்யும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

செய்தியாளர் பயணம்

 

இந்த செய்தியாளர் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:ஊரக வளர்ச்சித்துறை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், ஊராட்சி செயலர் ஆகியோரை நேரில் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று குடிநீர் பற்றாக்குறையை நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மேடான பகுதியில் குடிநீர் செல்லாத இடங்களில் தாழ்வான பகுதியாக மாற்றி குழாய்களை பதித்து குடிநீர் வழங்கவும், அமராவதி ஆற்றுப்பகுதியில் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணற்றினை சுத்தப்படுத்தி தூர்வாரி அதிக அளவில் நீர் வரும் அளவிற்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பகுதி வரையுள்ள குடிநீர் பாதைகளிலுள்ள பழுதுகளை நீக்கி தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், உதவி செயற்பொறியாளர் மீனாகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உலகநாதன், தண்டபானி, உதவி பொறியாளர்கள் சரவணன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago