ஆன்லைன் மூலம் சாலை விபத்து வழக்குகள் ஆவணம் பெறும் வசதி
ஆன்லைன் மூலம் சாலைவிபத்து வழக்குகள் ஆவணம் பெறும் வசதியினை நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
உரிமையியல் தீர்ப்பாயம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எல்லா சாலை விபத்து வழக்குகளிலும் விரிவான விபத்து அறிக்கைகளை அந்தந்த உரிமையியல் தீர்ப்பாயம் முன்பு சமர்பிப்பத்துடன் அதனை காப்பீட்டு நிறுவனங்கள், குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவருடன் பரிமாறிக்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் அனைத்து காவல்நிலையங்களிலும் இன்று முதல்(1_ந் தேதி) சாலை விபத்து வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் திட்டம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பதிவிறக்கம் வசதி
இதில் முதல் தகவல் அறிக்கை, வாகன பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம், காப்பீட்டுச் சான்றிதழ், வணிக தகுதி சான்று மற்றும் அனுமதி, மாதிரி வரைபடம், பார்வை மகஜர், மோட்டார் வாகன ஆய்வறிக்கை, பிண ஆய்வு சான்று, விபத்து பதிவேடு நகல், காயச்சான்றிதழ், இறுதி அறிக்கை உள்ளிட்ட 13 வகையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதனை சம்பந்தப்படுவோர் அவர்களாகவே சூசூசூ.டீஙூடீஙுசுடுஷடீஙூ.சிடூஙீச்ங்டுஷடீ.கிச்சு.டுடூ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு எஸ்.பிமுரளிரம்பா கூறினார். அப்போது கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக் கண்காணிப்பாளர்கள் திருமேனி, மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.