முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக பணி மாணவர்கள் சார்பாக மரம் நடு விழா

புதன்கிழமை, 1 மார்ச் 2017      சென்னை

சென்னையில் உள்ள சமூக பணிகளுக்கான கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வர்தா புயலால் மரங்கள் விழுந்த பகுதிகளில் புதிதாக மரங்களை நடுதல் என்ற நோக்கில் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

 

சென்னையில் உள்ள எம்.எஸ்.எஸ் என்ற சமூக பணிகளுக்கான கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வர்தா புயலால் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்களை நட குழு குழுவாக பிரிந்து பவ்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

 

இதன் ஒரு கட்டமாக இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்களான வி.மகேஷ், என்.மகேஷ்வரி, சஞ்சனா நாயர், பி.ஆஷா, ஜி.இ.ஸ்ரீஷா, ஆன்ட்ரீவ் பெஞ்சமின், கோஷிகுமார், பெனியல் செளந்தர்ராஜன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் மரக்கன்றுகளை நடும் விழாவை நடத்தினர்.

 

முன்னதாக இந்த மாணவர்கள் வீடு வீடாக சென்று ஒரு மரம் விழுந்தால் அந்த இடத்தில் 3 மரங்களையாவது கட்டாயம் நடுவதால் இயற்கை சமநிலை ஏற்படுவதோடு, சூழல் காக்கப்படும் என்றும், மரங்கள் நடுவதால் மட்டுமே மழைக்கு வழி ஏற்படும் என எடுத்துரைத்து அவர்களை அவரவர் வீடுகளில் மரக்கன்றுகளை நட அறிவுறுத்தினர்.

 

தொடர்ந்து மாணவர்கள் பெருவாயல் கிராமம், பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றில் சுமார் 100 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்வின் போது டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் உடனிருந்து மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை துவக்கி வைத்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago