ஜெகன் மீது பொய் வழக்கு நடிகை ரோஜா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      அரசியல்
actress roja(N)

திருப்பதி  - ஜெகன் மீது பொய் வழக்கு  போடப்பட்டதாக நடிகை ரோஜா குற்றச்சாட்டு கூறியுள்ளார் . இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஜா திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கிருஷ்ணா மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திவாகர் டிராவல்ஸுக்கு சொந்த மான இந்த பஸ், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கு சொந்தமானது என்ற காரணத் தால், அவரைக் காப்பாற்று வதற்காக விபத்து தொடர்பான உண்மைகளை மறைக்க மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

திவாகர் டிராவல்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக, ஜெகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க ஆளும் கட்சி முயற்சிக் கிறது. திவாகர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், நான் போராட்டத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு ரோஜா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: